ஞாயிறு, ஜனவரி 01, 2012

புத்தாண்டு தேவையா நமக்கு ? 2



புயலால் பல மாவட்டங்கள் இருளில் மூழ்கி போயுள்ளது, தொலை தொடர்புகள் அறுந்து போயுள்ளது, அலைபேசி தூண்கள் முறிந்து போயுள்ளது, நம் மக்கள் 1970 ல் உள்ள மாதிரி வானோலி மட்டும் கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது அவர்களுக்கு அதுதான் தகவல் தொடர்பு சாதனமே. இந்த நேரத்தில் இது தேவையா?    (சுனாமி வந்த போதே கொண்டாட்டத்தை நிறுத்தவில்லை இதற்காகவா நிறுத்த போகிறார்கள்) சரி சரி 12 மணி ஆகிவிட்டது
மெரினாவில் சத்தம் கேட்கிறது மூடிட்டு போங்க இணையத்தை..

புத்தாண்டு தேவையா நமக்கு ? 1

 
நான் எந்த ஒரு புத்தாண்டையும் கொண்டாடுவதில்லை, அதனால் யாருக்கும் வாழ்த்து சொல்ல போவதுமில்லை.
இந்த புத்தாண்டால் யாருக்கு லாபம்
1 டாஸ்மாக்
2 இரவு விடுதிகள்
இந்த கேடுகெட்ட கலாச்சாரத்திற்கு நான் வாழ்த்து சொல்ல வேண்டுமா என்ன ?
வலது, இடது மற்றும் பகுத்தறிவு பாசறைகள் எல்லாம் ஆங்கில புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது .
உங்களை எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் .......

வியாழன், டிசம்பர் 29, 2011

தந்தை பெரியாரும் முல்லை பெரியாறும்.




இன்றைக்கு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை முல்லை பெரியார். லோக்பால் விடவும் முக்கிய பிரச்சினையாக கருத படுகிறது. ஏன் என்றால் லோக்பாலில் எந்த உயிருக்கும் எந்த உடமைக்கும் தற்பொழுது நஷ்டம் கிடையாது. முல்லை பெரியாரால் இரு மாநிலத்திலும் பதட்டம். முதலில் தீர்க்க பட வேண்டியது முல்லை பெரியார் பிரச்சனையே, இதில் நடிகர்கள் குரல் குடுக்க வேண்டுமா ? நடிகர்களை நடிகர்களாக விட்டு விடுவோம் மற்ற விசயத்துக்கு அவர்கள்  குரல் கொடுக்க வில்லையென்றால் என்ற  நிபந்தனையோடு . மற்றபடி ஊழலுக்காக குரல் கொடுப்பேன் என்று பொங்கி எழுந்த ஒரு நடிகர் டில்லிக்கு போய் வட நாட்டு இளைய தளபதிக்கு  (நீங்க தமிழகத்து அன்ன ஹசாரே ன்னு சொல்லு போது நாங்க சொல்ல கூடாதா?) ஆதரவு கொடுக்க போனார். ஒருத்தர் மண்டபம் தருகிறாராம், உள்ளூரில் நடக்கும் பிரச்சினைக்கு வாய்ஸ் இல்லையாம், உங்க கிட்ட எவன் வாய்ஸ் கேட்டான் நீங்க எல்லாம் வாயை மூடிட்டு இருந்தாலே தமிழகம் நன்றாக இருக்கும். மற்றபடி உங்க சொந்த பிரச்சனைக்களுக்கு  பொங்கி எழவேண்டாம், நான் அரசியலுக்கு வருவேன் என்று . இதுவரை உங்களது சொந்த பிரச்சனைக்காக தான் அரசியலுக்கு வருவேன் என்று செய்ததை சென்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கண்டு கொண்டோம். சமீபத்தில்  சென்னை வந்துட்டு போன அன்ன ஹசாரேக்கு தெரியவில்லை முல்லை பெரியார் பிரச்னை.ஏன் என்றால் அதை பற்றி கருத்து  சொன்னதாக தெரியவில்லை .பொதுவாக வட நாட்டுக்காரர்களுக்கு தென் இந்தியாவை பற்றி அவ்வளவுவாக  தெரியாது என்று நினைக்கிறேன் .இதில் வெளிநாட்டில் வாழும் தமிழர்க்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டையும், (மதராசி) கேரளா என்று தான் சொல்லுவான் .சரி அதிலாவது ஒற்றுமையாக இருக்கோம். சரி இறுதியாக ஒன்று: விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்க முயல்வோம். அன்று தன் சொத்தை விற்று அணையை கட்டினார்  மேஜர் ஜான் பென்னி குயிக் இன்று தந்தை பெரியார் இருந்தால்  அவரே எவ்வளவு செலவானாலும் செய்து இருப்பார். கள்ளுக்கடை போரட்டத்திற்க்காக தன் சொந்த தென்னந்தோப்பையே அழித்தவராயிற்றே அவர் .

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

எனது பிரவேசம்








பாசத்திற்கு உரிய தமிழ் உறவுகளே! இது எனது பிரவேசம், புதிதாக அரம்பித்திள்ள வலைப்பூ. முதல் பிரசவம் மாதிரியும் எனக்கு.  புதிதாக தடம் பதித்துள்ள எனக்கு ஆலோசனையும், ஆதரவையும் தவறு ஏதும் இருந்தால் ஆரோக்யமான கருத்துகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி !